சர்வதேச
நாணய நிதியம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து பகிரங்க
விவாதத்திற்கு வருமாறு மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு
ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷா டி சில்வா சவால்
விடுத்துள்ளார்.
நாணய பரிமாற்ற வீதங்களை மாற்றவும் மானியங்களைக் குறைப்பதற்கும் இணங்கியதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அரசாங்கம் அடிபணிந்துள்ளதாக ஹார்ஷா டி சில்வா கூறினார்.
அண்மையில் எரிபொருள் விலை அதிகரித்தமைக்கு உலக சந்தையில் விலை அதிகரித்தமை
காரணம் அல்ல எனவும், பொருளாதாரத்தை அரசாங்கம் தொழில்வாண்மையற்ற தன்மையில்
கையாண்டமையே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, ஒவ்வொரு துறைக்குமான மானியங்கள் முறைமை வரவேற்கத்தக்கது எனவும்
ஆனால், மானியங்களை பெறுவதற்கான செலவுகளும் கவனிக்கப்பட வேண்டும் என அவர்
கூறினார். உதாரணமாக, தோட்டத் தொழிலாளி ஒருவர் 200 ரூபாவை பெறுவதற்கு 400
ரூபா சம்பளத்தை இழக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.