தமிழீழ
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அந்தச் சிறைச்சாலை
அதிகாரிகள் மீது (25) தாக்குதலை நடத்தினர் எனச் செய்திகள்
தெரிவிக்கின்றன.
கையடக்கத் தொலைபேசியொன்று கைதி ஒருவரிடம் உள்ளதாகக்
கிடைத்த தகவலையடுத்து அதனைக் கைப்பற்றும் நோக்கில் சென்ற சிறை அதிகாரிகள்
மீதே இந்தக் கைதிகள் தாக்குதல் நடத்தியதுடன் தண்ணீரையும்
பீச்சியடித்துள்ளனர். அத்துடன் குறித்த கைதிகள் கற்களாலும் அதிகாரிகளைத்
தாக்கியுள்ளனர் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.