அத்துடன்
12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு 200 ரூபாவாலும், 400 கிராம் பால்மாக்களின்
விலைகள் 15 ரூபாவாலும் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில்,
அரசாங்கம் இராணுத்துக்கு கடந்த வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கியுள்ள
பலகோடி ரூபாய்கள் காரணமாக அதனை ஈடுசெய்வதற்காக மேலும் வருமானங்களை
அதிகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்,
தேவையற்ற செலவீனங்களையும் குறைக்கவேண்டிய நிலையில் உள்ளது. எனினும்,
பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் போது பொதுமக்களின் நுகர்வில் குறைவுகள்
ஏற்படும் போது அதனால் அரசாங்கம் எதிர்ப்பார்த்த வருமானத்தை பெறமுடியாமல்
போகலாம் என்று பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.