இந்திய, இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் சிபீ கிண்ண முக்கோண
தொடரின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது.
இன்று இடம்பெற்ற இந்திய அணியுடனான போட்டியில் 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் அவுஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலளித்த இந்திய அணி 39.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வியடைந்தது.
சிபீ கிண்ணத் தொடரில் இதுவரை நிறைவுற்ற 10 போட்டிகளின்படி 19 புள்ளிகளைப் பெற்று அவுஸ்திரேலியா முதல் இடத்திலும் 15 புள்ளிகளைப் பெற்று இலங்கை இரண்டாம் இடத்திலும் 10 புள்ளிகளைப் பெற்று இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
இத்தொடரில் இன்றும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளன. இவ்விரு போட்டிகளிலும் இலங்கை அணி மோதவுள்ளது. அவுஸ்திரேலிய அணியுடன் இறுதிப் போட்டியில் மோத இலங்கை அணிக்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
எனினும் இலங்கை மோவுள்ள எதிர்வரும் இரு போட்டிகளிலும் இலங்கை அணி மிக மோசமாகத் தோல்வியுற்று இந்தியா ஒரு போட்டியில் மேலதிக போனஸ் புள்ளியுடன் சிறந்த ஓட்ட விகிதத்தில் வெற்றிபெற்றால் இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும்.
அப்படியின்றி இலங்கை அணி இரு போட்டிகளில் ஒன்றை வெற்றிகொண்டு அல்லது சமநிலையில் நிறைவு செய்தால் இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் என்பதோடு, இந்திய அணியும் தனது இறுதிப் போட்டியில் தோல்வியுற்றால் இலங்கைக்கு வெற்றிவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும்.
ஆக அவுஸ்திரேலிய அணியுடன் இறுதிப் போட்டியில் மோதப்போவது யார் என்பது எதிர்வரும் 11, 12வது போட்டிகளின் முடிவில் தங்கியுள்ளது.