ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான
தீர்மானத்தை முன்வைக்கப்படவுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து
நாடு முழுவதிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அரசாங்கத்துக்கு ஆதரவாக சுயதொழில் புரிவோருக்கான சம்மேளனம்
ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு, பம்பலப்பிட்டி பிரதேசத்தில்
இடம்பெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில்
ஈடுபட்டுள்ளதையும் பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதையும்
படங்களில் காணலாம்.