ரயில்வே
பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு
முடிவடைந்துள்ளது. இப்பகிஷ்கரிப்பு காரணமாக நாடுமுழுவதும் ரயில்சேவைகள்
ஸ்தம்பித்திருந்தன.
எனினும் போக்குவரத்து அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளருடன்
தொழிற்சங்கப் பிரதிநிதிகள் நடத்திய கலந்துரையாடலையடுத்து இப்பகிஷ்கரிப்பு
கைவிடப்பட்டது.
ரயில்வே உத்தியோகஸ்தர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதாக
இக்கலந்துரையாடலின்போது அமைச்சர் உறுதியளித்தார். அதையடுத்து பகிஷ்கரிப்பை
கைவிட தொழிற்சங்க பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்தனர்.