நாட்டின்
பெரும்பாலான பகுதிகளில் இன்றையதினம் கடும் காற்று மற்றும் இடியுடன் கூடிய
மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்
தெரிவித்துள்ளது.
மேல், தென், தென்கிழக்கு பகுதிகள் உட்பட மன்னார் வளைகுடாவில் மணிக்கு 20
முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதுடன்,
சில பகுதிகளில் மணிக்கு 45 முதல் 50 கிலோமீற்றர் வேகத்துக்கு
அதிகரிக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடலுக்கு செல்வது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை எதனையும்
விடுக்காத வேளையிலும் பொதுமக்கள், குறிப்பாக கடல் தொழிலாளர்களும் மிகவும்
அவதானத்துடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.