தமக்கு
சலுகை விலையில் 76 ரூபாவுக்கு டீசல் வழங்கப்பட்டால் அண்மையில்
மேற்கொள்ளப்பட்ட 20 சதவீத கட்டண அதிகரிப்பை கைவிடத் தயார் என தனியார் பஸ்
உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பஸ் கட்டண அதிகரிப்பினால் மக்கள் எதிர்கொள்ளும் சிரமம் தமக்குத் தெரியும்
எனவும் இதனால் தமக்கு மானியம் வழங்குமாறு தேசிய
போக்குவரத்துஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும்
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன கூறினார்.
நியாயமான அளவு மானியம் வழங்கினால் எந்த நேரத்திலும் பஸ் கட்டணத்தை குறைத்துக்கொள்ளத் தயார் என அவர் கூறினார்.
எவ்வாறெனினும், 20 சதவீத பஸ் கட்டண அதிகரிப்பானது பஸ்கட்டண
நிர்ணயிப்புக்கான சூத்திரத்தின்படி கணிக்கப்படவில்லை என கெமுனு விஜேரட்ன
கூறினார். பஸ் கட்டணத்தை நிர்ணயிப்பதில் குத்தகை வீதம், டீசல் விலை,
நாளாந்த, மாதாந்த, வருடாந்த பராமரிப்புச் செலவுகள், வட்டிவீதம், பஸ்
ஊழியர்களுக்கான சம்பளம் உட்பட 12 அம்சங்கள் கருத்திற்கொள்ளப்படுவதாகவும்
அவர் தெரிவித்தார்.