வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளை நிர்வாணமாக்கி சோதனை செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நீதவான் இவோன் பெர்னாட்டே, சிறைச்சாலைகள் ஆணையாருக்கு இன்று இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போது சாட்சியமளித்த பெண் கைதி ஒருவர் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.