வெளிநாட்டு
மைதானங்களில் தொடர் தோல்விகளை இந்திய அணி சந்தித்து வருவதால் அணித்தலைவர்
பதவியில் இருந்து டோனி நீக்கப்படலாம் என தகவல் வெளியானது.
புதிய
அணித்தலைவராக சேவக் அல்லது வீராத் ஹோக்லி நியமிக்கப்படலாம் என தகவல்கள்
வெளியாகின. இந்நிலையில் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என
டோனி அதிரடியாக அறிவித்தார்.
இதுகுறித்து முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கர் கூறுகையில், டோனி சிறந்த அணித்தலைவர். அவர் தனது பணியை திறம்பட செய்து வருகிறார்.
இப்போதைக்கு அவரை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. 2013ம் ஆண்டு வரை அவரை அணித்தலைவர் பதவியில் தொடர செய்ய வேண்டும்.
3
வகையான போட்டிகளுக்கும் வெவ்வேறு அணித்தலைவரை நியமித்தால் தேவையில்லாத
குழப்பம் தான் ஏற்படும். ஒரே வீரர்களை கொண்டு ஆடும் போது யார் கட்டளையை
கேட்டு நடப்பது என்ற பிரிவினை வந்துவிடும் என்றார்.
அசாருதீன்
கூறுகையில், அணித்தலைவர் பதவிக்கு டோனி தான் தகுதியான நபர். அணித்தலைவரை
மாற்ற வேண்டும் என்ற பேச்சு இப்போதைக்கு தேவையில்லாதது. அதற்கான தருணம்
வரவில்லை.
வெற்றி,
தோல்வி என்பது விளையாட்டில் ஒரு அங்கம். வரும் நாட்களில் இந்திய அணி
நிச்சயம் சிறப்பாக ஆடும். சச்சின் விரைவில் 100வது சதம் விளாசுவார்
என்றார்.