
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தனியாக தீர்மானங்களை எடுக்க முடியாதுஎன பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட
ரீதியில் தீர்மானங்களை எடுக்கும் உரிமை ஜனாதிபதிக்குகிடையாது எனவும், அந்த
உரிமை பாராளுமன்றத்திற்கே காணப்படுகின்றது எனவும்
அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றமே
அரசியல் சாசனத்தை உருவாக்கியது எனவும், அரசியல்சாசனத்தில் மாற்றங்களை
ஏற்படுத்தும் முழு உரிமையும் பாராளுமன்றிற்கே காணப்படுகின்றது எனஅவர்
குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரம் பாராளுமன்றிற்கு காணப்படுகின்றது எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரத்தினபுரி பாடசாலை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


