மரண தண்டனை அமுலாக்கம் தொடர்பில் கருத்துக் கணிப்பு


மரண தண்டனை அமுலாக்கம் தொடர்பில் கருத்துக் கணிப்பு
மரண தண்டனையை மீள அமுல்படுத்துவது குறித்து பொது மக்களிடம் கருத்துகணிப்பு நடத்தப்பட உள்ளது.
 
மரண தண்டனையை அமுல்படுத்துவதன் மூலம் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தமுடியுமா என்பது குறித்து மக்களின் கருத்துக்கள் அறியப்படவுள்ளது.
 
இலங்கை சிறைச்சாலைத் திணைக்களம் இந்தக் கருத்துக் கணிப்பைநடாத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
அனுராதபுரத்தில் நடைபெற்று வரும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சில் இதுதொடர்பான கருத்துக் கணிப்பு நடத்தப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
சிறைச்சாலை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள வினாக்கொத்தைமக்கள் பூர்த்தி செய்து மீள ஒப்டைத்து, இந்தக் கருத்துக் கணிப்பிற்கு ஒத்துழைப்புவழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்தக் கருத்துக் கணிப்பு தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம்ஒப்படைக்கப்பட உள்ளது.
 
இலங்கையில் மரண தண்டனை அமுலில் உள்ள போதிலும் 1973ம் ஆண்டின்பின்னர் எவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
எவ்வாறெனினும், 2000ம் ஆண்டின் பின்னர் இதுவரையில் 1164 பேருக்குமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now