நன்றாக சமைத்த கோழி இறைச்சியை உணவாக உட்கொள்வதாயின், இந்த வைரஸ் குறித்து அச்சமடையத் தேவையில்லை என அமைச்சின் செயலாளர் கே.எம்.ரி.கேதரகம தெரிவித்தார்.
இதேவேளை, பிங்கிரிய பிரதேசத்தில் வைரஸ் கண்டறியப்பட்ட கால்நடை பண்ணைக்கு சுமார் 3 கிலோமீற்றர் தூரத்திற்கு உட்பட்ட சகல கோழிப்பண்ணைகளையும் விசேட பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பண்ணைகளிலுள்ள அனைத்து கோழிகளினதும் இரத்த மாதிரிகளைப் பெற்று இரசாயண ஆய்வுக்கூட பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறினார்.