உலகில்
இதுவரையில் பல லட்சக்கணக்கான உயிரினங்கள் கண்டறியப்பட்டபோதிலும் இன்னும்
அறியப்படாத உயிரினங்கள் ஏராளம் காணப்படுகின்றன. இவை தொடர்பான ஆராய்ச்சிகள்
தொடர்ந்தவண்ணம் இருக்கும் சூழ்நிலையில் இதுவரை பார்த்திராத பயங்கர
தோற்றமுடைய உயிரினம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.பொலிசீற்ஸ் என்றழைக்கப்படும் இவ்வினோத உயிரினங்கள் கடலின் 1000 மீட்டர்கள் ஆழத்தில் காணப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தமது வடிவத்தை மாற்றக்கூடிய இவ் உயிரினமானது 375 டிகிரி வெப்பநிலையிலும் வாழக்கூடியது என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.







