விண்டோசில் போல்டர்களை வெவ்வேறு நிறங்களில் அழகாக மாற்ற

விண்டோசில் போல்டர்களை ஒரே மாதிரி பார்த்து போர் அடிக்குதா? அனைத்து போல்டர்களும் ஒரே நிறத்தில் இருப்பதால் தேவையான போல்டரை கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம் இனி விண்டோஸ் போல்டர்களுக்கு உங்கள் விருப்பம் போல வெவ்வேறு நிறங்களை கொடுத்து அழகாக மாற்றலாம். அடிக்கடி உபயோகப்படுத்தும் போல்டர்களை குறிப்பிட்ட நிறத்தில் மாற்றில் இனி சுலபமாக கண்டறியலாம்.


இன்ஸ்டால் செய்வது எப்படி:
  • விண்டோசில் உள்ள போல்டர்களை வெவ்வேறு நிறங்களில் மாற்ற இந்த லிங்கில் Folder Colorizer கிளிக் செய்து 1.28MB அளவுடையை சிறிய மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும். 
  • கணினியில் இன்ஸ்டால் செய்த பிறகு Free Activation விண்டோ வந்தால் உங்கள் ஈமெயிலை கொடுத்து Register செய்து கொள்ளவும். அங்கு உள்ள டிக் மார்க் எடுத்து விடவும்.
  • பிறகு நீங்கள் கொடுத்த ஈமெயில் ஐடிக்கு ஒரு Verification Link அனுப்புவார்கள் அதை கிளிக் செய்து இந்த மென்பொருளை இலவசமாக ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். ஈமெயில் வரவில்லை என்றாலும் பிரச்சினையில்லை பிறகு வரும் போது ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். 
  • ஆக்டிவேட் செய்யாவிட்டாலும் இந்த மென்பொருளை உபயோகிக்க முடியும்.
போல்டர்களை வெவ்வேறு நிறங்களில் மாற்ற:
  • நீங்கள் கலரை மாற்ற விரும்பும் போல்டர் மீது ரைட் கிளிக் செய்து Colorize என்பதில் உங்களுக்கு தேவையான நிறத்தை கிளிக் செய்தால் போதும் சில வினாடிகளில் உங்களுடைய போல்டர் அந்த நிறத்திற்கு மாறிவிடும்.
  • இதிலுள்ள நிறங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் Colors என்பதை கிளிக் செய்து உங்களுக்கு வேண்டிய நிறத்தை நீங்களே உருவாக்கி கொள்ளலாம். 
  • இது போன்று உங்களுக்கு தேவையான நிறத்தை தேர்வு செய்து போல்டரில் வைத்து அழகாக மாற்றலாம். 
விண்டோசில் நிறத்தை மாற்றிய போல்டர்களை மீண்டும் பழைய வடிவில் கொண்டு வர அந்த போல்டர் மீது ரைட் கிளிக் செய்து Colorize! ==> Restore Original Color என்பதை கொடுத்தால் பழைய நிறம் திரும்பவும் வந்துவிடும்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now