ஈரானிய கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்,
பதிலுக்கு சில ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி
ஈரான் எடுத்துள்ள அதிரடி முடிவு ஆகியவை காரணமாக உலக சந்தையில் கசசா
எண்ணெய்யின் விலை நேற்று ஒரு பீப்பாய் 124 டொலராக உயர்ந்துள்ளது.
விரைவிலேயே இந்த விலை 150 டொலர்களாக உயர்வடையும் என்றும் அஞ்சப்படுகிறது.
இதுவரை கச்சா எண்ணெய் விலை மிக மிக அதிகபட்சமாக பீப்பாய் ஒன்றுக்கு 147 டொலரை எட்டியது. இது நடந்தது 2008ம் ஆண்டு ஜூன் மாதத்தில். இதன் பிறகு இப்போது மீண்டும் அதே நிலையை நோக்கி கச்சா எண்ணெய் விலை போய்க் கொண்டுள்ளது.
ஈரானின் இந்த அறிவிப்பு காரணமாக இலங்கையில் பாரியளவு தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை 93 வீதமான கச்சா எண்ணெய்யை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இம்மாத ஆரம்பத்தில் எரிபொருட்களின் விலையை அரசு உயர்த்தியிருந்தது.
இந்நிலையில் தொடர்ந்தும் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பு மேலும் இலங்கைக்கு பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும்.