தாங்க முடியாத முதுகு வலியா . . . .? ? ?

இன்றைய வாழ்க்கைச் சூழ லில், முதுகு இருக்கும் அனைவருக் குமே முதுகு வலியும் இருக்கி றது! 
 
உடம்பில் உள்ள அனைத்துத் தசைகளின் அழுத்தமும் ஒரு சேர முதுகுத் தண்டில் குவிவதா ல் ஏற்படும் பிரச்னை இது” என் கிறார் எலும்பு மூட்டு நிபுணர் (ஆர்த்ராஸ்கோப்பிக் அறுவைச் சிகிச்சையாளர்) டாக்டர் ரவி சுப்பிரமணியம்.

”உடல் ரீதியாக முதுகு வலி எப்படி உருவாகிறது?”
”சிறு சிறு கண்ணிகள் போன்ற அமைப்புடன் கூடிய 33 எலும்புகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிய நிலையி ல் வலுவாகப் பிணைத்து வைக்கப்பட்ட துதான் ‘முதுகெலும்புத் தொடர்’. இதில், எலும்புகளுக்கு இடையில் உராய்வைத் தடுக்கும் விதமாக டிஸ்க் எனப்படும் ஜெல் லி போன்ற மிருதுவான பாகங்கள் உள் ளன. இரு சக்கர வாகனங்களில் அதிர்வுக ளைத் தாங்குவ தற்குப் பயன்படும் ‘ஷாக் அப்சர்வர்’ போன்ற அமைப்பு இது.

துளையுடனான முதுகெலும்புகளுக்கு   நடு வே மிகவும் பாதுகாப்பான நிலையில் இருக்கி ன்றன தண்டுவட நரம்புகள். உடல் உறுப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத் தக்கூடிய மூளையின் உத்தரவுகளை கட த்திச் செல்லும் முக்கியப் பணியைச் செய்வது இந்தத் தண்டுவட நரம்புகள்தான். முதுகெலும்புகளுக்கு மத்தியில் உள்ள டிஸ்க் நகர்ந்து இந்த நரம்புகள் நசுக்கப்படும் போது தாங்க முடியாத வலி ஏற்படும். இதைத்தான் முதுகு வலி என்கிறோம்.”




”முதுகு வலி வருவதற்கான காரணங்கள் என்னென்ன?”
”உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது தான் பலருக்கும் முதுகு வலி வருவதற் கான முக்கியக் காரணம். வேலை நிமித் தமாக தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன்பு அமர்ந் தே இருக்கக்கூடிய சூழல், தினமும் இரு சக்கர வாகனங்களில் நெடு ந்தொலைவு பயணித்தல், உடல் எடை கூடுதல், கூன் விழுந்த நிலை யில் உட்கார்ந்திருத்தல் போன்ற செய் கைகளால், உடல் தசைகள் பலவீனம் அடைவதோடு, முதுகெலும்புகளில் உள்ள ‘டிஸ்க்’ அமைப்புகளிலும் அதீத அழுத்தமும் தேய்மானமும் ஏற்படுகி றது. இதனால், ஒட்டுமொத்த முதுகெ லும்பு அமைப்பும் சீர்குலைவதோடு, தண்டுவட நரம்புகளும் அழுத் தப்பட்டு வலி ஏற்படுகிறது. தவிர, எலும்புகளில் ஏற்படும் சத்துக் குறைவுப் பாதிப்புகளாலும் முதுகு வலி வரும்.”


”எலும்புகளில் என்னென்ன பிரச்னைகள் தோன்றும்?”
”எலும்பின் உறுதித்தன்மைக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியத் தின் பங்கு முக்கியமானது. 20 வயது இளைஞனின் எலும்பில் கால்சியத்தின் அளவு அதிகமாக இருப்பதால், எலும்புகளும் வலுவா க இருக்கும். ஆனால், வயது கூடும் போது இந்த கால்சியத்தின் அளவு ம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறை ந்து எலும்பு மெலிந்து, மிருதுத் தன் மையை அடைந்துவிடும். இதை ‘எலும்பு மெலிதல்’ (Osteo porosis) என்கிறோம். நகரச் சூழலில் இருப்ப வர்கள் பெரும்பாலும் வீட்டிற்குள் ளேயே அடைந்து கிடப்பதால், உடலில் வெயில்படுவதே அபூர்வ மாகி விட்டது. வெயிலில் கிடைக்கும் ‘வைட்டமின் டி’ எலும்பு களுக்குக் கிடைக்காமல் போவதாலும் எலும்புகள் மிருதுத் தன்மை அடைந்து எளிதில் தேய்மா ன மாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, தினமும் அரை ம ணி நேரமாவது உடலில் வெயில் படும்படி யாகச் சூழ்நிலைகளை மாற்றிக் கொள்வது நல்லது!”


”முதுகு வலித் தொல்லையி ல் இருந்து விடுபட, கால்சிய ம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால் போதுமா?”
”அப்படி இல்லை. ‘பாலில் கால்சியம் சத்து உண்டு. எலும்பின் ஆரோக் கியத்துக்கு இது நல் லது’ என்று நினைத்து நிறைய பேர் பால் குடிக்கிறார்கள். ஆ னால், பாலில் உள்ள கால்சிய த்தைப் பிரித்தெடுக்கும் ரெனின் என்சைம் (Rennin Enzyme) குழந்தைகளின் (குறி ப்பிட்ட வயது வரை) உடலில் மட்டுமே சுரக்கிறது. பெரியவர் களுக்கு இந்த வகை என்சைம் கள் இயற் கையாகவே உடலில் சுரப்பது இல்லை. எனவே, எவ் வளவு தான் பால் குடித்தாலும் அதில் இருக்கும் கால்சியம் எலும்புகளுக்கு கிடைக்காது.


அடுத்ததாக, கார்பனேட்டட் ட்ரி ங்க்ஸ், பதப்படுத்தப்பட்ட உண வு வகைகளில் பாஸ்ஃ போரிக் அமிலம் (Phosphoric Acid) சேர்ப் பார்கள். இது உடலில் கால்சியம் சத்து உறிஞ்சப்படுவதைத் தடை செய்யும். எனவே, இதுபோன்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சாதார ண மாக நாம் சாப்பிடும் உணவு வகைக ளிலேயே நமது எலும்புகளுக்குத் தேவை யான கால்சியம் சத்து இருக்கிறது. கால் சியத்தை எலும்பு கிரகிக்கவும், முதுகு வலிக்கு முடிவு கட்டவும் ஒரே வழி உடற் பயிற்சிதான். உடற்பயிற்சி செய்யும்போ து தான், எலும்புகள் தங்களுக்குத் தேவை யான கால்சியத்தை உறிஞ்சும்!”


”எலும்பின் ஆரோக்கியம் காக்க எந்த வகை உடற்பயிற்சிகள் செய்யலாம்?”
”நீச்சல், ஓட்டம், சைக்கி ளிங் போன்ற எலும்பு மூட் டுகளுக்குப் பயிற்சி அளிக் கக்கூடிய ஏரோபிக்ஸ் (Aerobics Exercise) வகை உடற்பயிற்சி கள் நல்லது. இவை தவிர, உடலின் வளைவுத்தன்மைக்கு உத வும் யோகாவும் எலும் பின் ஆரோக்கியத்தைக் காக்க வல்லது!
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now