மஸ்கெலியா கிளன்டில்
தோட்டத்தைச் சேர்ந்த சேவஸ்வரன் ரேணுகா தம்பதியினர், தமது பொறுப்பற்ற
செயலால் ஒருவயதுப் புதல்வனைப் பறிகொடுத்துள்ளனர்.
இத்தம்பதியினர் நோயுற்ற தமது புதல்வன்
சதுர்சனை கடந்த 10 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு மஸ்கெலியா மாவட்ட
வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
இந்த ஒருவயதுப் பாலகனை மருத்துவ
பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்திய அதிகாரி திருமதி ஆயிலா வெத்தசிங்க,
குழந்தைக்கு அம்மைநோய் இருப்பதாகக் குறிப்பிட்டு தனிக்கட்டிலை ஒதுக்கி,
பாதுகாப்பாகப் பராமரிக்குமாறு பணிப்புரை வழங்கிவிட்டுச் சென்றுள்ளார்.
எனினும், பெற்றோர் அன்று காலை 10
மணிக்கே விடாப்பிடியாக சுய விருப்பத்தின் பேரில் வைத்தியசாலையிலிருந்து
தமது புதல்வனை வீட்டுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
எனினும், கடந்த 17 தினங்களுக்குப்
பின்னர் நேற்று திங்கட்கிழமை பெற்றோர் அக்குழந்தையை சுகவீனம் காரணமாக
மீண்டும் அதேவைத்தியசாலையில் சேர்ப்பதற்குக் கொண்டுவந்துள்ளனர். ஆனால்,
குழந்தை இறந்தநிலையில் காணப்பட்டமையால் குழந்தையின் சடலம் பிரேதஅறையில்
வைக்கப்பட்டு நாவலப்பிட்டி சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது
எனத் தெரிவிக்கப்பட்டது.
|
பெற்றோரின் கவனயீனத்தால் பறிபோனது குழந்தை உயிர்
Labels:
விபத்துக்கள்