வாகன சாரதிகளுக்கு எதிராக மோட்டார் வாகன போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வாகன சாரதிகளும், முன் ஆசனத்திலிருந்து
பயணம் செய்பவர்களும் ஆசனப்பட்டியணியாது செல்லும் போது போக்குவரத்து
காவற்துறையினரால் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு அதே இடத்தில் தண்டப்பண அறவீடு
வழங்கப்பபடும், அதே நேரம் 3 தடவைக்கு மேற்பட்ட தண்டப்பணமானால் சாரதி
அனுமதிப்பத்திரம் அதே இடத்தில் வைத்து ரத்துச் செய்வதற்கு மோட்டார் வாகன
போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த
ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது
அதன் போது அமைச்சர் அனுரபிரியதாஸனயாப்பா இவ் அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம் இதற்கான அமைச்சரைவப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.
இதன்படி முதல் முறையாக குற்றவாளியாக
இணங்கானப்படுவோருக்கு 1000 ரூபா முதல் 2000 ரூபா வரையிலும், இரண்டாம் முறை
குற்றவாளியாவோருக்கு 2000 ரூபா முதல் 3000 ரூபா வரையிலும், மூன்றாம்
முறையும் குற்றவாளியாவோருக்கு 3500 ரூபாவுக்கு குறையதா அபராதத்தினை
விதிப்பதற்கு சட்டதில் மாற்றம் செய்யவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக
அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
|
மோட்டார் வாகன போக்குவரத்து சட்டத்தில் புதிய திருத்தங்கள்
Labels:
அறிவிப்புகள்,
இலங்கை