சில அரசியல்வாதிகள் மக்களுக்கு தேவையான
விடயங்கள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்காமல் தேவையற்ற விடயங்களுக்காக
அடம்பிடிக்கின்றனர், அப் போக்கைக் கைவிட்டு அவர்கள் அரசுடன் இணைந்து
செயற்பட முன்வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறார் பிரதமர் டி.எம்.ஜயரட்ன.
யாழ். மணிக்கூட்டுக் கோபுர வீதியில்
அமையவுள்ள ஜெட்விங் யாழ் ஹேட்டலுக்கான அடிக்கல்லை இன்று நாட்டி
உரையாற்றியபோதே பிரதமர் இவ் அழைப்பை விடுத்தார்.
தலைநகர் கொழும்பில் 7 லட்சம் தமிழ்
மக்களும், கிழக்கில் 5 லட்சம் தமிழ் மக்களும் ,சிங்கள மக்களோடு
அந்நியோன்னியமாக வாழ்ந்து வருகின்றபோது வடக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு அது
ஏன் முடியாத காரியம் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய
பிரதமர்,இலங்கையில் வாழ்கின்ற இனங்கள் பலவல்ல, ஒன்றுதான். அது நாட்டை
நேசிக்கின்ற இனம். பிறக்கின்ற போது நாங்கள் ஒருவருமே இன,மத அடையாளங்களுடன்
பிறப்பதில்லை. அது நாங்களாக தோற்றிவித்துக்கொள்வது. எனவே நாங்கள் ஒரே
நாட்டவர் என்ற நீதியில் ஒற்றுமையாக வாழ்வோம்" என்றார்.
|
||