பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று (21) திடீர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் அவசர அழைப்பின் பேரில், இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அழைப்பை ஏற்று அலரி மாளிகைக்குச் சென்ற சம்பந்தன் ஜனாதிபதியை அங்கு சந்தித்துள்ளார்.
இப் பேச்சுவார்த்தையில் உரையாடப்பட்ட விடயங்கள் மற்றும் பேச்சுவார்த்தையின் நோக்கம் என்பன குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கனடா பிரேரணையை முன்வைக்கலாம் என்ற அச்சம்மும் அதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்கினால் ஏனைய நாடுகளும் ஆதரவு வழங்கும் என்ற அச்சமும் இலங்கைக்கு இருந்து வருகிறது.
இந்த நிலையில் தலையிடிக்கு மேல் தலையிடி கொடுக்கும் வகையில் ஜெனீவா கூட்டத்தொடரில் பங்குகொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜெனீவா செல்லவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் பின்புலத்தில் இடம்பெற்றுள்ள ஜனாதிபதி - சம்பந்தன் சந்திப்பு சமூக ஆர்வளர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


