இங்கிலாந்து
எப்.ஏ. கோப்பை கால்பந்து தொடர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி அபார வெற்றி
பெற்றது. இங்கிலாந்தின் லண்டனில் நடந்த இப்போட்டியில் லிவர்பூல்,
பிரைட்டன் அணிகள் மோதின.
போட்டியின்
5வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் மார்டின் முதல் கோல் அடித்தார்.
இதனைத் தொடர்ந்து 17வது நிமிடம் பிரைட்டன் அணியின் கஜென்கா, பதில் கோல்
அடித்தார்.
அடுத்து
லிவர்பூல் அணியின் ஆன்ட்ரூ, லூயிஸ் சாரஸ் 57, 85வது நிமிடங்களில் தலா ஒரு
கோல் அடித்தனர். மறுமுனையில், பிரைட்டன் அணி வீரர்கள் தங்கள் அணிக்கு கோல்
அடிப்பதற்கு பதில், லிவர்பூல் அணிக்கு கோல் அடிப்பதிலே ஆர்வம் காட்டினர்.
இந்த
அணியின் லியாம் (44, 71) இரு முறை "சேம்சைடு' கோல் அடிக்க, லீவிஸ்(74வது)
தன்பங்கிற்கு இதே தவறை செய்தார். முடிவில் 6-1 என்ற கோல் கணக்கில்
லிவர்பூல் அணி அபார வெற்றி பெற்றது.


