எரிபொருள், மின், பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் நீர் கட்டணத்தை அதிகரிக்க தாம் விரும்பவில்லை என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நீர் கட்டணத்தை உயர்த்தும் தேவை ஏற்பட்டாலும் நீர் உற்பத்தி செலவுகளை குறைத்து கட்டண உயர்வை மேற்கொள்ளாதிருக்கவே செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அந்த சபையின் தலைவர் கருணாசேன ஹெட்டியாராச்சி அத தெரணவிடம் தெரிவித்தார்.
நீரை சேமித்தல், நீர் வீண்விரயமாகுதலை தடுத்தல், உற்பத்தி செலவைக் குறைத்தல் போன்ற திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு நட்டம் ஏற்படும் நிலை வந்தாலும் உற்பத்தி செலவை குறைத்து நீர் கட்டண உயர்வை மேற்கொள்ளாதிருக்கவே முயற்சிப்பதாக கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
கடந்த 2009ம் ஆண்டு தொடக்கம் இதுவரை நீர் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.