இலங்கையில் திட்டமிட்ட ஆட்கடத்தல் - பிரசல்ஸ்
இலங்கைச்
சார்ந்த ஆட்கடத்தல்களை மேற்கொள்ளும் திட்டமிட்ட குழுவொன்று தொடர்பான
தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரசல்ஸ்ஸில் உள்ள இலங்கை தூதுவர் காரியாலயம்
அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய
நாடுகளுக்கு அவர்கள் இலங்கையர்களை, ஐக்கிய அரபு ராச்சியம், கென்யா,
டான்சானியா, துருக்கி மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளின் ஊடாக கடத்துவதாக
தெரியவந்துள்ளது.
இவ்வாறான
சந்தேகத்திற்குரியவர்கள் 27 பேர் அண்மையில் பின்லாந்து, பிரான்ஸ் மற்றும்
பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் கைது செய்யப்பட்டனர்.
குறித்த
ஆட்கடத்தல்களை செயற்படுத்தும், முக்கிய நபர் பிரான்சில் கைது செய்யப்பட்ட
நிலையில், அதன் பின்னரே அதிகளவான தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி,
பின்லாந்தில் மாத்திரம் நூற்றுக்கணக்கும் அதிகமாக அதிகாரிகள்
ஈடுபடுத்தப்பட்டு கடத்தல் காரர்களை கைது செய்வதற்கான சோதனை நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படுகின்றன.
அத்துடன்,
பிரான்ஸ் உள்ளிட்ட ஏனைய நாடுகளும் இலங்கை சார்ந்த கடத்தல்காரர்களை கைது
செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Labels:
குற்றவியல்