உலக எண்ணெய் விலையை
நிர்ணயிக்கும் சிங்கப்பூர் சந்தையின் நிலைவரத்திற்கு அமைவாக, இலங்கையில்
பெற்றோல் ஒரு லீற்றர் 81 ரூபாவாகவும், டீசல் ஒரு லீற்றர் 75 ரூபாவாகவும்,
மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 85 ரூபாவாகவுமே இருக்கவேண்டும்
இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் அவர் மேலும் கூறியவை வருமாறு:
இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் அவர் மேலும் கூறியவை வருமாறு:
சிங்கப்பூர் எண்ணெய்ச் சந்தையின் விலைகளுக்கு அமைவாகவே இலங்கையிலும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த விலைகளுக்கு மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ள பணத்தை இலங்கை அரசு வரியாகவே அறவிடுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் எரிபொருட்களின் விலைகள் இரண்டு, மூன்று ரூபாவினாலேயே அதிகரிக்கப்பட்டன. இப்படி ஒரேயடியான விலை அதிகரிப்பை நாம் மேற்கொள்ளவில்லை. உலகிலேயே இந்தளவு வீதமான விலை அதிகரிப்பு ஒரே நாளில் மேற்கொண்ட நாடு என்ற அற்ப பெருமை மட்டுமே இலங்கைக்கு மிஞ்சுகிறது.
உலக எண்ணெய் விலை அதிகரிப்பிற்கேற்ப, எரிபொருள் விலைகளை அதிகரித்ததாக அரசு கூறுகின்றது. அது உண்மையாயின், தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையில் மட்டும் ஏன் எரிபொருள் விலை இவ்வளவு உச்சத்தில் உள்ளது என்று கேட்க விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டார் ரவி கருணாநாயக்க.