எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக கோட்டைப் புகையிரத நிலையத்திற்கு முன்பாக
மேற்கொள்ளப்பட்டுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர் புகை
மற்றும் தண்ணீரடிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக நாடுதழுவிய ரீதியில் இன்று முதல் பல்வேறு கட்சிகள் இணைந்து எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
அதன் ஒரங்கமாக கொழும்பு- கோட்டைப் புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஜக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி,தமிழ் தேசியக் கூட்டமைப்பு,இடதுசாரி முன்னணி, மாலையகக் கட்சிகள், பொது மக்கள் மற்றும் மீனவ அமைப்புக்கள் என இணைந்து இப் போராட்டத்தை இன்று பிற்பகல் 3 மணி முதல் முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில், எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் கோட்டைப் புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு லேக்ஹவுஸ் சந்தி வரை பேரணியாகச் செல்ல முற்பட்டபோது பொலிஸார் அதனைத் தடுத்து நிறுத்த முயன்றனர். இதன்போது ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக பொலிஸாரால் கண்ணீரர் புகை மற்றும் தண்ணீரடிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும்,ஆர்ப்பாட்டக்கரர்களை கட்டுப்படுத்தும் முகமாக ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.