சவால் நிறைந்த ஃபேஸ்புக்கின் ‘மெகா’ கனவு பலிக்குமா? உலகமே facebook ஐ பாவிக்கும் நாள் எப்போது?

சோஷியல் மீடியாவான ஃபேஸ்புக் புதிய சவுகரியங்களை வழங்கி கொண்டே போகிறது. மொத்தம் 200 கோடி பேர் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். இதில் 84.5 கோடி மக்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவரையும் ஃபேஸ்புக்கில் இணைய செய்யும் மிகப்பெரிய திட்டத்தை ஃபேஸ்புக் செயல்படுத்த இருக்கிறது. மிகப்பெரிய சவாலான காரியம் என்றாலும், இதை நிஜமாக்க ஃபேஸ்புக் கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளது.

மொத்த இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் 40 சதவீதம் பேர் ஃபேஸ்புக் பயன்படுத்துகின்றனர். இதில் மீதமுள்ள 60% சதவிகிதம் பேரை ஃபேஸ்புக் பயன்படுத்த செய்வது தான், ஃபேஸ்புக்கிற்கு பெரிய சாவாலாக இருக்கிறது. அதிலும், மீதமுள்ள 60 சதவீதத்தினர் ஆசிய நாடுகளில்தான் இருக்கி்ன்றனர்.
அதிலும் சீனாவை எடுத்து கொண்டால், இங்கு உள்ள மக்கள் தொழில் நுட்பங்களை அதிகம் பயன்படுத்த கூடியவர்களாக இருக்கின்றனர். இது போன்ற தொழில் நுட்ப வளர்ச்சிக்கு பல வகையான மக்களுடன் தொடர்பில் இருப்பது அவசியமாகிறது. அதற்கு பேஸ்புக் போன்ற சோஷியல் மீடியா அவசியம் தான்.

சீனாவில் இருக்கும் மக்களில் 1 சதவிகிதம் பேர் தான் ஃபேஸ்புக் பயன்படுத்துகின்றனர். இந்த ஃபேஸ்புக் அக்சஸ் சீனாவில் தற்சமயம் தடை செய்யப்பட்டுள்ளது தான் இந்த குறைவான பயன்பாட்டிற்கு காரணம். இந்தியாவில் ஃபேஸ்புக் சம்பந்தமாக நீதிமன்ற வழக்குகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த இரண்டு நாடுகளில் உள்ள மக்களும் ஃபேஸ்புக் பயன்படுத்தினால், ஃபேஸ்புக் இன்னும் அதிக வளர்ச்சியை பெறும். ஆனால் சீனா போன்ற நாடுகளில் ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியா பயன்படுத்த செய்வது அவ்வளவு சுலபமல்ல.

ஏனெனில் இது கம்யூனிச நாடு என்பதால், இங்கு சட்ட திட்ட வரம்புகள் மிக கண்டிப்பானது. ஆனால் ஃபேஸ்புக்கில் நினைத்த விஷயங்கள் எல்லாம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இதனால் நிறைய பிரச்சனைகள் உருவாக வாய்ப்பும் இருப்பதால், இது போன்ற விஷயங்களுக்கு சீனா அனுமதிப்பது அவ்வளவு சுலபம் அல்ல.

தற்சமயம் ஃபேஸ்புக் அக்சஸிற்கு விதித்துள்ள தடை நீக்கப்பட்டால் நிச்சயம் சீனாவில் அதிக மக்களால் ஃபேஸ்புக் பயன்படுத்தப்படும். இதனால் ஃபேஸ்புக் வளர்ச்சி பல மடங்காக அதிகரிக்கும். ஆனால் நிறைய சட்ட ரீதியான சவால்களை ஃபேஸ்புக் சந்திக்க நேரிடும். இனி ஃபேஸ்புக் என்ன யுக்தியை தொடர போகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம். ஃபேஸ்புக் நிச்சயம் இந்த சவாலை வி்த்தியாசமான முறையில் கையாளும் என்று நம்பப்படுகிறது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now