ஹஜ்ஜுக் கடமையை நிறை வேற்ற 2012ம் ஆண்டு தயாராக வுள்ள
அனைவரும் இம்மாதம் 28ம் திகதிக்கு முன்னர் முஸ்லிம் கலாசார திணைக்களத்தின்
மூலம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் பதிவு செய்யாதவர்களுக்கு ஹஜ்
கடமையை நிறைவேற்றச் செல்வது கஷ்டமாகும் என்று நகர விவகார சிரேஷ்ட அமைச்சர்
ஏ. எச். எம். பெளஸி தெரிவித்துள்ளார்.
ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்வதற்கு இவ்
வருடம் தாயாராகவுள்ள அனைவரும் முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தில் 25000.00
செலுத்தி தங்களை பதிவு செய்து கொள்ளவும் ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும்
போது செலுத்த வேண்டிய மொத்தத் தொகையில் இருந்து தாங்கள் செலுத்திய
பதிவுக்கட்டணம் கழித்தே பெறப்படும்.
முதன் முதலாக ஹஜ் கடமையை நிறைவேற்றச்
செல்வோருக்கே இம்முறை முன்னுரிமை வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏற்கனவே ஹஜ் கடமையை நிறைவேற்றியவர்களுக்கு அதற்குப் பிறகுதான்
வழங்கப்படும் என்றும் கூறினார்.


