இலவச போட்டோஷாப் மென்பொருளான Gimp-2.6.12 புதிய பதிப்பு டவுன்லோட் செய்ய

போட்டோக்களை அழகாக எடிட் செய்ய உதவும் மென்பொருள் போட்டோஷாப் ஆகும் ஆனால் போட்டோஷாப் மென்பொருள் இலவசமல்ல. காசு கொடுத்து வாங்க வேண்டும். இதனால் பெரும்பாலானவர்கள் போட்டோஷாப் மென்பொருளை கிராக் செய்து உபயோகிக்கின்றனர். 

அதில் நீங்களும் ஒருவர் என்றால் இனி கவலையை விடுங்கள் போட்டோஷாப் போன்றே அதே சமயம் 100% இலவசமாக ஒரு மென்பொருள் Gimp ஆகும். இந்த மென்பொருளில் போட்டோசாப்பில் உள்ள 90% சதவீத வசதிகள் இதில் உள்ளது. 

இன்னும் சொல்ல போனால் போட்டோஷாப்பில் இல்லாத ஒரு சில வசதிகளும் இந்த Gimp மென்பொருளில் இருக்கிறது. இவ்வளவு வசதிகள் இருந்தும் இந்த மென்பொருள் இலவசமாக கொடுப்பது தான் ஆச்சர்யம்.  இந்த மென்பொருளின் புதிய பதிப்பான GIMP 2.6.12 வெளிவந்துள்ளது.


சிறப்பம்சங்கள்:
  • இந்த மென்பொருளை உபயோகிப்பது மிக சுலபம். சாதரணமாக Ms paint உபயோகிப்பது போல இருக்கும்.
  • TIFF, JPEG, GIF, PNG, PSD போன்ற இமேஜ் பார்மட்டுகளுக்கு சப்போர்ட் செய்கிறது.
  • முற்றிலும் இலவசமான மென்பொருள்.
  • மென்பொருள் இயங்க போட்டோஷாப் போன்று கணினியில் அதிக இடம் எடுத்து கொள்ளாது. ஆகவே இதனை உபயோகிக்கும் பொழுது உங்கள் கணினியின் வேகம் குறைவதில்லை.
  • போட்டோக்களை சுலபமாக உயர்தரத்தில் மாற்றி கொள்ளலாம்.
  • Linux, Mac, Windows போன்ற கணினிகளில் இயங்க கூடியது.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - GIMP 2.6.12
இந்த மென்பொருளின் பயனர் கையேடு(Users Manual) டவுன்லோட் செய்ய -English
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now