கூகுள் சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் சுலபமாக திறக்க - Terminal for Google

கூகுள் பல எண்ணற்ற பயனுள்ள சேவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. பிளாக்கர், ஜிமெயில், யூடியுப், பீட்பர்னர் என இதன் பட்டியல் நீள்கிறது. இந்த சேவைகளுக்கு செல்ல அந்தந்த தளத்தின் சரியான URL கொடுத்து தான் ஓபன் செய்ய வேண்டும்.

கூகுளின் அனைத்து சேவைகளுக்கும் தனித்தனியாக URL கொடுப்பதிர்க்கு பதில் ஒரு கிளிக் செய்தாலே அந்த குறிப்பிட்ட தளத்திற்கு செல்லும் வசதியை எப்படி கொண்டு வருவது என்பதை விளக்கும் பதிவு இது. இந்த செயலை சுலபமாக செய்ய ஒரு பயனுள்ள குரோம் நீட்சி உள்ளது. இந்த நீட்சியை குரோமில் இணைத்து கொண்டால் போதும். கூகுளின் அனைத்து சேவைகளுக்கும் ஒரு நொடியில் சென்றுவிடலாம். ஒவ்வொரு முறையும் URL டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.

நீட்சியின் பயன்கள்:
  • ஒவ்வொரு முறையும் URL கொடுத்து தளத்தை ஓபன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை அடிக்கடி உபயோகிக்கும் கூகுள் சேவைகளில் முதலில் வைத்து கொண்டும் ஒரே கிளிக்கில் அந்த தளத்திற்கு சென்று விடலாம்.
  • உங்களுக்கு எத்தனை கூகுள் சேவைகள் தெரிய வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
  • எந்த இணையதளத்தின் இணைய பக்கத்தையும் ஜிமெயில் மற்றும் பிளாக்கரில் share செய்யும் வசதி.
  • கூகுள் சேவைகளை icon மட்டும் உங்களுக்கு தெரியும் படி தேர்வு செய்து கொள்ளலாம்.
  • ஜிமெயில் மற்றும் ரீடர்களில் இன்னும் படிக்காத பதிவுகளின் எண்ணிக்கையை காட்டுவது இதன் கூடுதல் சிறப்பு. 
உபயோகிக்கும் முறை:

இந்த Terminal for Google நீட்சியை டவுன்லோட் செய்து குரோம் உலவியில் இன்ஸ்டால் செய்து கொண்ட பிறகு க்ரோமில் தோன்றும் அந்த ஐகானை கிளிக் செய்தால் கூகுள் சேவைகள் வரும் அதில் நிறைய கூகுள் சேவைகள் இருக்கும் இது வேண்டாம் குறிப்பிட்ட சேவைகள் மட்டும் தெரிந்தால் போதும் என்று எண்ணினால் அங்கு உள்ள Options Page என்பதை கிளிக் செய்யுங்கள். கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் Services என்பதை கிளிக் செய்யுங்கள்.


அதில் Enabled Services என்பதில் உள்ள சேவைகள் நீட்சியை கிளிக் செய்தால் வரும், Disabled Services என்பதில் உள்ள சேவைகள் உங்களுக்கு தெரியாது. இதில் உங்கள் விருப்பம் சேவைகளை நகர்த்தி கொள்ளலாம். 

இனி அனைத்து சேவைகளின் URL ஞாபகம் வைத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே கிளிக்கில் எந்த சேவைக்கும் சுலபமாக செல்லலாம்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now