![]()
வடக்கில் ஒவ்வொரு இரண்டு
நாள்களுக்கும் கட்டாக்காலி நாய்களின் கடிக்கு உள்ளாக்கப்படுபவர்களின்
எண்ணிக்கை அதிகரித்து உள்ளன. நாய் கடிக்கு உள்ளானோரின் எண்ணிக்கை அரசினர்
வைத்திய சாலைகளில் 110 இற்கும் 250 இற்கும் இடைப்பட்ட அளவில் பதிவாகி
வருகிறது.
இதில் விசர் நாய்க்கடிக்கு உள்ளாகி
தகுந்த சிகிச்சை பெறாத பலர் இறக்கும் நிலையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சுகாதாரப் பகுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி,
வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களிலும் 3 லட்சத்து 75 ஆயிரத்
துக்கும் மேற்பட்ட கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ்
கட்டாக்காலி நாய்களைக் கொல்லக்கூடாது என்பது அரசின் இறுக்கமான சட்டம்.ஆனால்
நாய்க்கடிக்கு உள்ளாகி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
நாடு தழுவிய ரீதியில் 31 லட்சம் கட்டாக்காலி நாய்கள் பதி வாகியுள்ளன.
மலடாக்குவதற்கும்கர்ப்பத்தடை, சத்திரசிகிச்சை செய்வதற்கும் அரசு ஒதுக்கி வரும் நிதியும் தற்போது குறைந்துவிட்டது.
2012 மே மாதத்துக்குப் பின்னர்
வெப்பநிலை அதிகரிப்பினால் கட்டாக் காலி நாய்களால் ஆபத்து அதிகரிக்கும்
என்று சுகாதாரப் பகுதி எச்சரிக்கின்றது. புதிய நடமுறையின் கீழ் பொதுச்
சுகாதாரப் பரிசோதகர்கள் வீடுவீடாக கட்டாக்காலி வீட்டு நாய் விசர்நாய்
என்பவற்றின் விவரங்களைத் திரட்ட சுகாதார மட்டத்தில் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடு தழுவிய ரீதியில் கட்டாக்காலி
நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் விசர் நாய்க்கடி
சிகிச்சைக்காகவும் 121 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் பதிவுகள்
தெரிவிக்கின்றன.
|
வடக்கில் நாய்க்கடிக்கு இலக்காவோர் அதிகரிப்பு; இரு நாள்களில் 110 முதல் 250 பேர் வரை
Labels:
இலங்கை