பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மலின் பந்துவீச்சில்
எந்தவித சந்தேகங்களும் கிடையாது எனவும், சயீட் அஜ்மலின் பந்துவீச்சு
சர்வதேச கிரிக்கெட் சபையின் விதிமுறைக்கு ஏற்றவாறே காணப்படுகிறது என
சர்வதேசக் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் - இந்திய அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றிருந்த போதிலும், இந்திய அணியின் சில வீரர்கள் அஜ்மலின் பந்துவீச்சுத் தொடர்பாக சந்தேகம் வெளியிட்டதாக இந்தியத் தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் கருத்து வெளியிட்ட சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹரூன் லோகார்ட், ஒரு பந்துவீச்சாளரின் பந்துவீச்சுத் தொடர்பாக முறையிடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் சபை வழிமுறைகளைக் கொண்டு காணப்படுகிறது எனத் தெரிவித்த அவர், போட்டி மத்தியஸ்தர்கள், நடுவர்கள் ஆகியோர் ஒரு பந்துவீச்சாளரின் பந்துவீச்சை முறையற்றதாகக் கருதின் அதை முறையிட வழிகள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
அஜ்மலின் விவகாரத்தில் அஜ்மலை ஏற்கனவே பரிசோதித்துள்ளதாகவும், நேரடியான போட்டிகளிலும் அவரை கவனித்துள்ளதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவிற்குள் அவர் பந்துவீசுவதாகவும், அவரின் பந்துவீச்சுத் தொடர்பாக எந்தவித பிரச்சினைகளும் கிடையாது எனத் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், சாதாரண கண்களுக்குத் தெரியும் காட்சிக்கும், உண்மையான அளவீடுகளுக்கும் வித்தியாசம் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், அஜ்மல் சர்வதேச கிரிக்கெட் சபை விதிகளுக்கு ஏற்றவாறு பந்துவீசுவதாக உறுதிப்படுத்தினார்.