வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 16 அப்பாவி ஆப்கான் மக்களை சுட்டுக்கொன்ற அமெரிக்க ராணுவ வீரர் (படங்கள் இணைப்பு)



கந்தஹார் : ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள  ஒருவர் அருகில் உள்ள கிராமத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 16 பேர் பரிதாபமாக பலியாயினர்.

இதையடுத்து அந்த வீரர் கைது செய்யப்பட்டார். அல்கய்தா தீவிரவாதிகளை ஒழிப்பதற்காக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், தெற்கு ஆப்கன் முகாம் ஒன்றில் இருந்த அமெரிக்க வீரர் ஒருவர் நேற்று அதிகாலை 3 மணியளவில் அருகில் இருந்த கிராமத்துக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவி மக்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் 16 பேர் பலியாகி உள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு மலைவாழ் மக்கள் நலத் துறை அமைச்சர் அசடுல்லா காலித் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கியால் சுட்ட வீரரை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now