பதினேழு
வயது தனது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக நீதிமன்றத்தால்
குற்றவாளியாக காணப்பட்ட தந்தை ஒருவருக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்னாயக்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரொக்கமாக இரண்டு இலட்சம் ரூபாவை செலுத்துமாறும் பிரதிவாதியான தந்தைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதுதவிர 50 ஆயிரம் ரூபா அபராதத் தொகையையும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த ஒருவரே நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.