சனல் 4 காணொளி பக்கச்சார்பானது; சிறிலங்கா சாடல்

news
சிறிலங்கா தொடர்பில் செய்திகளை வெளியிடும் போது சனல் 4 தொலைக்காட்சி பக்கச்சார்பாகச் செயற்படுவதாகவும் அதன் ஒரு அங்கமாகவே இந்த காணொளி வெளியிடப்படவுள்ளதாக சிறிலங்கா அரசு சாடியுள்ளது.

இக் காணொளி போலியான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களைக் கொண்டது எனவும் சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களை நெருக்கடியில் ஆழ்த்தும் நோக்கிலேயே சனல் 4 ஊடகம் காணொளிகளை வெளியிட்டு வருகின்றது எனவும் பிரிட்டனுக்கான சிறிலங்காத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா தொடர்பில் செய்தி வெளியிடும்போது சனல் 4 தொலைக்காட்சி ஒரு பக்கச்சார்பாகவே நடந்து கொள்கின்றது. போரின் பின்னர் நாட்டில் பல சாதகமான நிலைமைகளை சனல் 4 ஊடகம் கண்டுகொள்ளத் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள தூதரகம்,

இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் முழு அளவிலான நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now