ஜெனிவாவில் இலங்கைக்கு
எதிரான பிரேரனை நிறைவேறினால் அமெரிக்க உட்பட சர்வதேச நாடுகளுக்கு எதிராக
நாடுமுழுவதும் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கூறியுள்ளது.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு பல தீய சக்திகள் ஜெனிவாவில் ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றன. அரசாங்கம் பிரேரணையை தோல்வியடையச் செய்ய இறுதிவரை போராட வேண்டும் என அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார். எந்தவேரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச கண்காணிப்பு குழுவொன்று இலங்கைக்குள் வருவதை அனுமதி வழங்கக் கூடாது. அவ்வாறனதொரு நிலை ஏற்பட்டால் நாட்டில் பாரிய சர்வதேச தலையீடுகளே ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள வசந்த பண்டார, எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்கள் தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் சிவில் அமைப்புகளுடனும் தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கைக்கு எதிரான ஜெனிவா பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளுக்கு எதிராக தொடர்ந்து முற்றுகைப் போராட்டங்களை நாடுமுழுவதிலும் ஈடுபடுவதுடன், உள்நாட்டிலுள்ள அந்த நாடுகளின் தூதரகங்கள் முன்னால் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். |
பிரேரனை நிறைவேறினால் நாடுமுழுவதும் போராட்டம் நடத்தப்படும்;தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
Labels:
இலங்கை