புத்தளம் பஸ் நிலைய வளாகத்திற்குள் வெற்றிலை எச்சில் துப்பினால் 500 ரூபா
அபராதம் விதிக்கப்படும் என விளம்பரம் ஒட்டப்பட்டுள்ளது. இந்த விளம்பரம்
பயணிகள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளதாக புத்தளம் நகரசபை
அறிவித்துள்ளது.
சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருப்போம் என்ற கருப்பொருளில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் புத்தளம் நகர சபையின் அதிரடி நடவடிக்கையில் ஒன்றாகவே இது அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, கண்ட இடங்களில் வெற்றிலை எச்சில் துப்பி சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தியவர்கள் தற்போது கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும். 10 ரூபா வெற்றிலைக்கு அபராதத் தொகையாக 500ரூபாவை கொடுக்க வேண்டுமா? என்று நகரசபை கேட்டுள்ளது.