ஆசியாவில் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு 8ம் இடம்

ஆசியாவில் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு 8ம் இடம்ஆசிய தரப்படுத்தலின்படி கொழும்பு பல்கலைக்கழகம் 8வது இடத்தை பிடித்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க பாராளுமன்றில் இன்று (30) தெரிவித்தார்.

அதுபோல பேராதனை, ரஜரட்டை, களனி, ஜயவர்த்தனபுர மற்றும் நாவல ஆகிய பல்கலைக்கழகங்கள் கடந்த 2011 வருடத்துடன் ஒப்பிடும்போது 2012ம் வருடம் பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் றுஹுணு பல்கலைக்கழகம் தரப்படுத்தலில் வீழ்ச்சியை கண்டுள்ளதாகவும் அதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் மாணவர் சங்கம் அங்கு இயங்கி வருகின்றமையே காரணம் எனவும் உயர் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் பல்கலைக்கழகம் குறித்து மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க கடந்த சபை அமர்வில் நிகழ்த்திய உரைக்கு பதிலளிக்கும் வகையிலேயே உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now