எனினும் மலையக பகுதிகளிலுள்ள மரக்கறி வகைகள் சாதாரண விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இவ்வாறு ஏற்பட்டுள்ள நிலையானது ஒவ்வொரு ஆண்டின் பெப்ரவரி மாதமும் ஏற்படும் நிலைமை என தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமையாளர் கிரிஸ்ட் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அறுவடையின்போது சந்தைக்கு அதிகளவான மரக்கறிகள் கிடைத்துள்ளமை மற்றும் விவசாயிகளின் திட்டமின்றி மரக்கறி வகைகள் வளர்கின்றமை இந்த நிலைமைக்கான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இதேவேளை தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறி வகைகள் கொண்டு வரப்படும்போது உரிய முறையில் பொதி செய்யாமை மரக்கறி வகைகள் சிதைவடைவதற்கு காரணமாக அமைகின்றது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
எனினும் ஒன்றிணைந்த விவசாய அமைப்பின் தலைவர் ஆர்.பி.ஹேரத் இந்த குற்றச்சாட்டை நிராகரித்தார்.
Tag: நியூஸ்பெஸ்ட்,மரக்கறி, விலைவீழ்ச்சி, தம்புள்ளை, விவசாயிகள் பாதிப்பு