வைத்தியசாலையின் மகப்பேற்று விசேட வைத்தியருக்கும் ஏனைய வைத்தியர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தொழிற்சார் பிரச்சினை இதற்கு காரணமென வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்கள் மாத்திரம் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்படுவதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திஸ்ஸ பெரேரா நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.
அவ்வாறான கர்ப்பிணிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.
கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் காணப்படும் இந்த பிர்ச்சினையைத் தீர்ப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்கவிடம் வினவியபோது, பிரச்சினை தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்படும்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
தனிப்பட்ட பிரச்சினைகளால் பொதுமக்களின் நலங்கள் பாதிக்கப்படக்கூடாது எனக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், பிரச்சினைக்கான தீர்வினை சம்பந்தப்பட்டவர்கள் காலதாமதமின்றி எடுக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.