பாடசாலை சீருடைகளை உடனடியாக விநியோகிக்குமாறு கோரிக்கை

பாடசாலை சீருடைகளை உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண நேற்று பாராளுமன்றத்தில் கோரிக்கைவிடுத்துள்ளார்.
 

இந்த வருடத்திற்கான பாடசாலை சீருடைகளை கடந்த வருட இறுதித் தவணையின் போது வழங்குவதாக கூறப்பட்டிருந்த போதிலும், இதுவரை அவை வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்கள் நியமனத்தின் போது, கடமை முழுமையாக உள்ளடக்கப்படும் வகையில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.

மாணவர்களுக்கான உதவித் தொகை மேலும் அதிகரிக்கப்படுமா என இதன்போது புத்திக்க பத்திரண வினவினார்.

கல்வி பிரதி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இதற்குப் பதிலளித்தார்.

இந்த விடயத்தில் மாணவர்களின் உயர்கல்வி மேம்பாட்டிற்கான ஊக்குவிப்புகள் குறித்தே கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், இதனை ஊக்குவிப்பு கொடுப்பனவாகவே கருத வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்த விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தாயசிறி ஜயசேகரவும் இணைந்துகொண்டார்.

கிழக்கு மாகாணத்தில் குடும்ப சுகாதார சேவை பிரிவுகளில் சுகாதார நலன் நிலையங்களின் பற்றாக்குறை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

சுகாதார பிரதி அமைச்சர் லலித் திசாநாயக்க இதற்குப் பதிலளித்தார்.

கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறி 2002 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் வடமத்திய மாகாணத்தில் சேவையில் ஈடபடுத்தப்பட்டுள்ள மேல் மாகாணத்தின் நிரந்தர வதிவிட ஆசிரியர்களுக்கு தத்தமது சொந்த இடங்களுக்கு இடமாற்றம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்தார்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி பிரதி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா கூறினார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now