கடந்த உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்பனையாகவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
உலக
கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள்
மோதின. இப்போட்டிகான டிக்கெட்டுகள் முழுமையாக விற்பனையாகவில்லை என்பது
பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.73.4 லட்சம் மதிப்புள்ள 405 டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. இதில் 96 டிக்கெட்டுகள் தலா ரூ.1,500 மதிப்புள்ளவை.
இது
தொடர்பாக மும்பை கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
டிக்கெட்டுகள் முழுமையாக விற்பனையாகாமல் இருந்திருக்கலாம். எனினும்
பாதுகாப்பு காரணங்களுக்காக சில இடங்களில் ரசிகர்கள் அமர
அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
உலக
கிண்ணப் போட்டியின் போது மும்பை கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,
மொத்தம் 31 ஆயிரத்து 118 டிக்கெட்டுகள் வரை விற்பனைக்கு வந்தன. இதில் 4
ஆயிரம் டிக்கெட்டுகள் கவுன்ட்டர்கள் மூலம் பொதுவாக விற்பனை செய்யப்பட்டன.
மற்ற டிக்கெட்டுகள் ஐசிசி, அதன் உறுப்பினர் கிளப்புகளுக்கு அளிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.