சில
இணைய தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம்
அறிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அவரது
குடும்பத்தாருக்கும் அவதூறு ஏற்படும் வகையில் சில இணைய தளங்கள் தகவல்களை
வெளியிட்டு வருவதாக பதில் ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன
தெரிவித்துள்ளார்.
சில
இணைய தளங்கள் தொடர்பிலான அறிக்கை ஒன்று ஜனாதிபதியிடம்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இலத்திரனியல் ஊடகங்கள்
மற்றும் செய்தித் தாள்களை கண்காணிக்க முடியும் என்ற போதிலும், இலங்கை
தொடர்பில் தகவல்களை வெளியிடும் பல்வேறு இணைய தளங்களை கண்காணிக்க முடியாது
என அவர் தெரிவித்துள்ளார்.
அநேகமான
இணைய தளங்கள் ஊடக அமைச்சில் பதிவு செய்யப்படாதவை என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார். போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் இணைய
தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம்
செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஊடகவியலாளர்கள் மீது அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்தமை கண்டிக்கப்பட வேண்டியவை என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.