பொதுமக்கள்
உறவாடல்அமைச்சரான மேர்வின் சில்வாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை
மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்
பொதுசெயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் கோரிக்கை ஒன்று ஐக்கிய
மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மத்திய
செயற்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று ஜனாதிபதி தலைமையில்
இடம்பெற்ற இந்த கூட்டத்தில் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அமைச்சர் மேர்வின் சில்வா குறித்து ஒழுக்காற்று நடவடிக்கை
எடுக்கப்படும் என அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தமையும் தெரிந்ததே..
கட்சி என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பதில்
ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன நேற்றுத்
தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.