புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் யுவராஜ் சிங்கை, சச்சின் டெண்டுல்கர் லண்டனில் சந்தித்தார்.
இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங்குக்கு நுரையீரலின் நடுவே புற்றுநோய் கட்டி ஏற்பட்டது.
இதற்காக அமெரிக்காவின் பாஸ்டன் புற்றுநோய் ஆய்வு மையத்தில் கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டார்.
மூன்று
கட்ட சிகிச்சை முடிந்து, தற்போது விரைவாக உடல்நலம் தேறி வருகிறார்.
இதற்கிடையே தனது கால் காயத்துக்கு சிகிச்சை மேற்கொள்ள லண்டன் சென்ற
சச்சின் அங்கு யுவராஜை நேரில் சந்தித்தார்.
அவரை
கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். நண்பர் ஒருவரின் அபார்ட்மென்ட்டில்
இருவரும் ஒரு மணி நேரம் செலவிட்டனர். அப்போது யுவராஜ் முழுமையாக
குணமடைந்து, விரைவில் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென சச்சின் விருப்பம்
தெரிவித்தார்.