ஈரானிய
எண்ணெய் ஏற்றுமதிக்கு புதிய தடைகளை விதிப்பதற்கான திட்டத்தை
முன்னெடுத்துச் செல்ல அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இன்று அங்கீகாரம்
அளித்துள்ளார்.
இத்திட்டத்தின்படி, ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் வெளிநாட்டு வங்கிகளுக்கு தடைகள் விதிக்கப்படும். ஈரானிய எண்ணெய் விற்பனையை கையாளும் ஈரானிய மத்திய வங்கியை உலக பொருளாதாரத்திலிருந்து தனிமை படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதன் மூலம் ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை கைவிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படும் என அமெரிக்கா கருதுகிறது.
சீனா, தென்கொரியா, இந்தியா, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெய்ன், கிறீஸ், இத்தாலி என்பன ஈரானியலிருந்து அதிக எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளாக கடந்த காலத்தில் விளங்கின.
ஈரானிலிருந்தே இலங்கை தனது தேவைக்கான எண்ணெயின் அதிகளவை இறக்குமதி செய்தமை குறிப்பிடத்தக்கது.
உலக சந்தையில் போதிய எரிபொருள் இருக்கும் என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் இத்தடையை முன்னெடுத்துச் செல்ல பராக் ஒபாமா அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.