ஏப்ரல்
நான்காம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல். தொடரின் ஐந்தாவது பருவகாலத்தின்
முழுப் போட்டிகளிலும் இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரும்,
மும்பை இன்டியன்ஸ் அணியின் தலைவருமான சச்சின் டெண்டுல்கர் பங்குபற்றுவது
சந்தேகத்திற்குரியதாகியுள்ளது. அவரது கால் விரலில் ஏற்பட்டுள்ள உபாதைக்காக
சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருப்பதன் காரணமாகவே இந்த நிலை
ஏற்பட்டுள்ளது.
டெண்டுல்கருக்கு நீண்டகாலமாகக் காணப்படும் இந்தப் பிரச்சினைக்காக அவர் வைத்தியரைச் சந்திக்க லண்டனுக்கு சென்றுள்ளார். நீண்டகாலமாக இக்காயத்துடன் விளையாடி வந்த நிலையில் தற்போது வைத்தியரைக் காண்பதற்காக அவர் லண்டன் சென்றுள்ளார்.
டெண்டுல்கருக்கு சத்திரசிகிச்சை தேவைப்படலாம் எனக் கருதப்படும் நிலையில், சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டால் அவர் ஐ.பி.எல். போட்டிகளில் பங்குபற்ற மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல். தொடரின் ஐந்தாவது பருவகாலம் ஏப்ரல் நான்காம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், முதலாவது போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணியும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன.
கடந்த வரும் ஐ.பி.எல். போட்டிகளில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட மும்பை இன்டியன்ஸ் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் தலைமை தாங்கியிருந்தார்.
ஓய்வுபெற்ற இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ராகுல் ட்ராவிட்டிற்கு நேற்றைய தினம் இடம்பெற்ற பாராட்டு விழாவிலும் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டிருக்கவில்லை. மும்பையில் அமைந்துள்ள இவரது இல்லத்துக்கு அண்மையில் அமைந்துள்ள ஹொட்டலில் இடம்பெற்றிருந்த போதிலும், ஏற்கனவே லண்டனுக்குப் புறப்பட்டிருந்ததன் காரணமாக அவ்விழாவில் பங்குபற்றியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஐ.பி.எல் போட்டிகளின் ஐந்தாவது பருவகாலப் போட்டிகளில் மும்பை இன்டியன்ஸ் அணியின் தலைவர் சச்சின் டெண்டுல்கர் பங்குபற்றுவார் என மும்பை இன்டியன்ஸ் அணி அறிவித்துள்ளது.

கால் விரலில் ஏற்பட்ட உபாதைக்காக இலண்டன் சென்றுள்ள சச்சின்
டெண்டுல்கர் அங்கு சத்திரசிகிச்சை மேற்கொண்டால் ஐ.பி.எல் போட்டிகளில்
பங்குபற்ற மாட்டார் என வெளியான செய்தியை மும்பை இன்டியன்ஸ் அணி
மறுத்துள்ளது.
ஏப்ரல் நான்காம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் சச்சின்
டெண்டுல்கர் பங்குபற்றுவார் எனத் தெரிவித்துள்ள மும்பை இன்டியன்ஸ் அணி
நிர்வாகம், இன்னும் இரண்டு நாட்களில் மும்பை இன்டியன்ஸ் அணிக்காக
இடம்பெறவுள்ள பயிற்சி முகாமில் சச்சின் டெண்டுல்கர் பங்குபற்றுவார் எனவும்
தெரிவித்துள்ளது.
சச்சின் டெண்டுல்கர் இலண்டனுக்குச் சென்றுள்ளதை உறுதிப்படுத்திய
மும்பை இன்டியன்ஸ் அணி, எனினும் அங்கு சத்திரசிகிச்சைக்காக அவர்
செல்லவில்லை எனவும், பரிசோதனைகளுக்காகவே சென்றுள்ளார் எனவும்
தெரிவித்துள்ளது.