களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்களில் அதிகரிப்பு காணப்படுவதாக அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த ஆண்டில் மாத்திரம் 8000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பொதுமக்கள் கூடிய கவனம் செலுத்தி டெங்கு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.