சென்னையில்
இருந்து வெளிநாட்டிற்கு செல்வதற்கு குறைந்த கட்டண சேவையை ஒரு வெளிநாட்டு
விமான நிறுவனம் தொடங்கி இருக்கிறது. சென்னை மற்றும் கோலாலம்பூர் இடையே
தினசரி இரண்டு விமானங்களை இயக்கி வரும் குறைந்த கட்டண விமான சேவை
நிறுவனமான ஏர் ஏஷியா சென்னையில் இருந்து இப்போது நேரடியாக தாய்லாந்து
நாட்டின் பேங்காக் நகருக்கு செல்ல விமான சேவையை தொடங்கி இருக்கிறது.
மேலும், செவ்வாய் மற்றும் சனி கிழமை தவிர வாரத்திற்கு 5 நாட்கள் இந்த விமானம் இயக்கப்படும் என்று தெரிகிறது. முன் கூட்டியே முன் பதிவு செய்வோருக்கு ஒரு வழி பயணத்திற்கு சலுகை கட்டணமாக 4,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, தென்னிந்திய நகரங்களில் இருந்து சுற்றுலாத்தலமான ஃபுகிஷுக்கும் நேரடி விமானங்கள் இயக்குவது தொடர்பாக பரிசீலித்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.