பேஸ்
புக் சமூக இணைப்புத் தளம் மூலம் விபச்சார மோசடி முயற்சியில் சிங்கள பெண்கள்
குழு ஒன்று ஈடுபடுகின்றமை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
தென்னிலங்கையின் பிரபல ஊடகங்களில் ஒன்றான நேத் எஃப். எம் ஆதாரங்களுடன் இம்மோசடியை அம்பலப்படுத்தி உள்ளது.
பேஸ்
புக் குழு பக்கம் ஒன்றில் கையடக்கத் தொலைபேசி இலக்கங்களை
பிரசுரிக்கின்றனர். விபச்சாரிகளை ஒழுங்கு பண்ணி தருவார்கள் என்று
கூறுகின்றனர். வங்கிக் கணக்குகளில் பணம் போடச் சொல்லி கேட்கின்றனர். பணம்
போடப்பட்ட பின்னர் தொடர்பை முற்றாக துண்டித்து விடுகின்றனர்.
எனவே ஆண்கள் மற்றும் பெண்கள் இக்குழுவினர் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்று கேட்கப்பட்டு உள்ளார்கள்.